Search This Blog

Saturday, February 8, 2014

உனையின்றி வேறில்லை



நிற்காமல் பறந்து கொண்டிருந்தேன் உன்னுடன்...

கால்கள் தரையில் படாமல்,
காற்றை கிழித்துக்கொண்டு, 
வேகமாய் ...

கவலையின்றி ...
பயமின்றி ...

உறைந்து போன நேரத்தில்,
விரைந்து சென்ற பருவம் விட்டு,
வரவிருக்கும் காலம் நோக்கி ...

முதுவேனில் மழை



காலையில் பார்த்த வானே !!!

நண்பகல் எரித்த தென்று,
கார்மேகம் போர்த்தி வைத்தாய்...

என்னுடன் கைகள் கோர்க்க,
சாரலும் தூர வைத்தாய்...

குட்டையில் அலை எழுப்பி,
கவலைகள் கலைத்து வைத்தாய்...

'சோ'என கனமழை கொட்டி,
அருகினில் நெருங்க வைத்தாய்...

மின்னல்கள் உடைத்து வைத்து,
மார்பினில் சாய வைத்தாய்...

முதுவேனில் மாலைப் பொழுதில் !!!

மஞ்சள் பிம்பம்

அழகிய சூரியனை தினமும் செதுக்கிய பின்,
கொல்லன் விட்டுச் செல்லும் தங்கத் துகள்கள் 

Sunday, July 15, 2012

"குட்டிப் பையன்"



பஞ்சாடை மேனியை
வெள்ளாடை போர்த்திட ,


கை கொக்கிகள் இரண்டும்
மாயக் கயிற்றில் தொங்கிட ,


கார்மேகங்கள் முடியாகி
காற்றில் அசைந்திட ,


அன்னையிட்ட  முத்தத்தில் 
கன்னமிரண்டும் சிவந்திட ,


பால் நிறைந்த தொந்தியுடன் ,
தரை தீண்டா பாதத்துடன் ,


நிம்மதியாய் உறங்குகின்றான் ....
சற்றுமுன் வரை செய்த சேட்டைகளை நிறுத்தி .....

Saturday, January 21, 2012

"THE BIG BLACK AND WHITE BOOK"

I realized life is very difficult for a 24yr old MBBS graduate to sit simply inside the house, that too with a Big Black and White book which has over 50,000 questions of which 250 will be asked in the entrance examination. For a year every day passed getting up, sitting in front of the book, eating, sleeping,sitting in front of the book, eating, sleeping and so on..When you are alone, you tend to think about your future, worrying how everything is gonna turn out... Will I get a Government job or do I have to rely on private practice...Will I be a gifted Doctor or do I have to kill time killing mosquitoes...Will I be married to a doctor preparing for the Pg entrance or a software professional who earns enough so I will be busy watching over the kids...Being a MBBS graduate people tend to sincerely inquire "தம்பி இப்போ என்ன தான் பண்றீங்க"...I used to politely explain that I am preparing for my PG Entrance...A week later the same person will ask"தம்பி இப்போ என்ன பண்றீங்க"...8 years passed since I finished my 12th here...so everyone expects me to be settled in life...I wish the same too... Unable to confront with the same question I started staying indoor...Nearly after a year I went to my favourite temple...luckily it was deserted...When i exited after spending a good amount of time i suddenly felt very light...Soon I was in home actively browsing through my Big Black and White book without realizing the fast flowing time..Today got up early went for a walk...Those who are like me ...Try to think what made you happier in the past redo the same whenever you feel depressed...I assure you will feel very light everytime you take your Big Black and White book...

Sunday, November 6, 2011

"என் நண்பனின் இறுதி நாளில் "

உடைந்து போன எலும்புகளில்,
நொருங்கி போன கனவுகள்...

உறைந்து நின்ற குருதியில்,
தேங்கி கிடந்த ஆசைகள்...

இமைக்க மறுத்த விழிகளில்,
பார்க்க துடித்த காட்சிகள்...

கேட்க அடைத்த செவிகளில்,
கதறி அழுத ஓலங்கள்...

நீ பிரிந்து சென்ற கூட்டிற்கு,
வருந்தி சென்ற நான்....

- உன் நண்பன்

Saturday, October 22, 2011

"மண்வாசனை "

வெப்பத்தில் உதிர்ந்து கிடக்கும்
மணல்துகள்களை ஒன்றாய்ச் சேர்க்க,
விண்ணில் இருந்து சொட்டு சொட்டாய்
துளிகள் விழுந்தன ....

தாகம் தணிந்த துகள்கள்
விட்ட பெருமூச்சினை
காற்றானது என்னிடம் சேர்க்க
ஆனந்தமாய் சுவாசிக்கிறேன்
மண்வாசனையை ...