Search This Blog

Sunday, November 6, 2011

"என் நண்பனின் இறுதி நாளில் "

உடைந்து போன எலும்புகளில்,
நொருங்கி போன கனவுகள்...

உறைந்து நின்ற குருதியில்,
தேங்கி கிடந்த ஆசைகள்...

இமைக்க மறுத்த விழிகளில்,
பார்க்க துடித்த காட்சிகள்...

கேட்க அடைத்த செவிகளில்,
கதறி அழுத ஓலங்கள்...

நீ பிரிந்து சென்ற கூட்டிற்கு,
வருந்தி சென்ற நான்....

- உன் நண்பன்

Saturday, October 22, 2011

"மண்வாசனை "

வெப்பத்தில் உதிர்ந்து கிடக்கும்
மணல்துகள்களை ஒன்றாய்ச் சேர்க்க,
விண்ணில் இருந்து சொட்டு சொட்டாய்
துளிகள் விழுந்தன ....

தாகம் தணிந்த துகள்கள்
விட்ட பெருமூச்சினை
காற்றானது என்னிடம் சேர்க்க
ஆனந்தமாய் சுவாசிக்கிறேன்
மண்வாசனையை ...