பஞ்சாடை மேனியை
வெள்ளாடை போர்த்திட ,
கை கொக்கிகள் இரண்டும்
மாயக் கயிற்றில் தொங்கிட ,
கார்மேகங்கள் முடியாகி
காற்றில் அசைந்திட ,
அன்னையிட்ட முத்தத்தில்
கன்னமிரண்டும் சிவந்திட ,
பால் நிறைந்த தொந்தியுடன் ,
தரை தீண்டா பாதத்துடன் ,
நிம்மதியாய் உறங்குகின்றான் ....
சற்றுமுன் வரை செய்த சேட்டைகளை நிறுத்தி .....
No comments:
Post a Comment