காலையில் பார்த்த வானே !!!
நண்பகல் எரித்த தென்று,
கார்மேகம் போர்த்தி வைத்தாய்...
என்னுடன் கைகள் கோர்க்க,
சாரலும் தூர வைத்தாய்...
குட்டையில் அலை எழுப்பி,
கவலைகள் கலைத்து வைத்தாய்...
'சோ'என கனமழை கொட்டி,
அருகினில் நெருங்க வைத்தாய்...
மின்னல்கள் உடைத்து வைத்து,
மார்பினில் சாய வைத்தாய்...
முதுவேனில் மாலைப் பொழுதில் !!!
No comments:
Post a Comment